தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

Friday, 15 June 2012

Device Driver என்றால் என்ன?


Device Driver என்றால் என்ன?http://tholanweb.blogspot.com/ணினி சீராகா இயங்க வேண்டுமானால் கணினியில் இணைக்கப் பட்டுள்ள ஒவ்வொரு Hardware சாதனங்களுக்குமான Driver Software நிறுவப்படிருத்தல் அவசியம் என்பதை பெரும்பாலானோர் அறிந்திருப்பதில்லை. இந்த சாதனங்களுள் மோம், நெட்வர்க் கார்ட், வீடியோ கார்ட், சவுண்ட் கார்ட் என பல வகைப்பட்ட சாதனங்கள் அடக்கம். கணினியிலிருக்கும் ஒவ்வொரு சாதனமும் அதற்குரிய Driver Software ரை கொண்டுள்ளன. Mouse, Key Board, Monitor கூட Driver Software கொண்டுள்ளன. எனினும் அவற்றுக்குரிய Driver Software ஐ நாம் நிறுவ வேண்டியதில்லை. ஏனெனில் இயங்கு தளங்கள் (விண்டோஸ்) தானாக அவற்றை நிறுவிக் கொள்ளும்.


Device Driver என்றால் என்ன?http://tholanweb.blogspot.com/


Driver Software எனப்படுவது ஒரு சிறிய software. Driver Software ஆனது Hardware சாதனத்துக்கும் இயங்குதளத்துக்குமிடையில் தொடர்பை உருவாக்கும் ஒரு மத்தியஸ்தத்ராகச் செயற்படுகிறது. ஒவ்வொரு Hardware சாதனமும் ஒரு Driver Software கொண்டிருப்பது அவசியம். அதன் மூலமாகவே இயங்கு தளம் அந்த சாதனத்தைக் கண்டு கொண்டு அதனை முறையாக இயக்குகிறது. ஒரு குறிப்பிட்ட ஒரு Hardware சாதனத்தைக் கணினி கண்டறிந்து அதனை இயக்குவதற்கு Driver Software உதவுகின்றது, புதிதாக ஒரு கணினியை விலைக்கு வாங்கும்போது அதற்குரிய Driver Softwareரும் இணைந்தே வரும். அத்தோடு பொதுவான சில சாதனங்களுக்கான Driver Software இயங்கு தளத்திலேயே காணப்படும். 


Device Driver என்றால் என்ன?http://tholanweb.blogspot.com/ 


Key Board, Mouse, Video Card, Network Card, Sound Card, CD Rom, Chipset, Printer, Scanner என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. விண்டோஸ் இயங்கு தளம் பல பொதுவான சாதனங்களுக்கான Driver Software ஐத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் மூலம் பல சாதனங்களை Driver Software நாம் நிறுவாமலேயே அடையாளம் கண்டு கொண்டு அதனை இயக்குகிறது. 




இயங்கு தளத்தை மேம்படுத்தும்போது, உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7க்கு மாறும்போது Driver Software ஐயும் மேம்படுத்த வேண்டியிருக்கும். ஒரு குறிப்பிட்ட சாதனத்துக்கு(Hardware) சில வேளை ஒன்றுக்கு மேற்பட்ட Driver Software கூட இருக்கலாம். உதாரணமாக விண்டோஸ் 95, 98, 2000, XP, vista என வெவ்வேறு பதிப்புகளுக்கும் மேக். லினக்ஸ் என வெவ்வேறு இயங்கு தளங்களுக்கும் வெவ்வேறு Driver Software அந்த Hardware சாதனத்தைத் தயாரிக்கும் நிறுவனம் வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். 


Device Driver என்றால் என்ன?http://tholanweb.blogspot.com/


ஒரு கணினியை வாங்கும்போதே அதற்குரிய Driver Software கொண்ட சிடியையும் (சிஸ்டம் டிஸ்க்) கேட்டுப் பெற மறந்து விடாதீர்கள். ஏனெனில் ஏற்கனவே கணினியில் தேவையான அனைத்து Driver Softwareரும் நிறுவப்பட்டிருந்தாலும் ஹாட் டிஸ்கை ஃபார்மட் செய்து மறுபடியும் இயங்கு தளத்தை நிறுவ வேண்டிய தேவை ஏற்பட்டால் ஒவ்வொரு சாதனத்துக்குமுரிய Driver Software ரையும் மறுபடியும் நிறுவ வேண்டி இருக்கும். அதனால் எப்போதும் Driver Software சீடியை கவனமாக வைத்திருத்தல் அவசியம். 


Device Driver என்றால் என்ன?http://tholanweb.blogspot.com/


Driver சிடி பழுதடைந்து விட்டால் அல்லது தொலைந்து விட்டாலும் கூட கவலைப்பட வேண்டாம். குறிப்பிட்ட அந்த சாதனத்தைத் தயாரித்த நிறுவனத்தின் இணைய தளத்திற்குச் சென்று அந்த சாதனத்துக்குரிய Driver SoftwareDownload செய்து நிறுவிக் கொள்ளலாம. அதே போன்று அனைத்து Hardware சாதனங்களுக்குமான Driver Software ஐ வழங்குவதற்காகவென்றே ஏராளமான இணைய தளங்கள் உள்ளன. சில இணைய தளங்கள் இலவசமாகவும் சில தளங்கள் ஒரு சிறிய தொகையைக் கட்டணமாக பெற்றும் இந்த சேவையை வழங்குகின்றன. அவ்வாறே இயங்கு தளத்தை மேம்படுத்த வேண்டிய சூல்நிலை ஏற்பட்டாலும் அந்த சாதனத்துக்குரிய(Hardware) Driver Software ஐப் பெற இணைய தளங்களை நாட வேண்டி வரலாம்.


Device Driver என்றால் என்ன?http://tholanweb.blogspot.com/

சில வேளைகளில் Driver Software சரிவர இயங்காமல் போகலாம் அல்லது கணினியிலுள்ள ஏனைய சாதனங்களுடன் முரண்படலாம்.  Software தயாரிப்பு நிறுவனங்கள் தமது Software ஐ அவ்வப்போது மேம்படுத்துவது போலவே Hardware சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் தமது சாதனத்துக்குரிய Driver Software ஐயும் மேம்படுத்துகின்றன. ஒரு சாதனம் முறையாக இயங்காமல் போகும் சந்தர்ப்பங்களில் அல்லது ஏனைய சாதனங்களுடன் முரண்படும் வேளைகளில் Driver Software மேம்படுத்துவதன் மூலம் அந்த பிரச்சினையை நீக்கலாம். 




உதாரணமாக ஒரு மோடம் சரிவர இயங்காமல் போனால் அதனைத் தயாரித்த நிறுவனத்தின் இணைய தளத்திற்குச் சென்று மேம்படுத்தப்பட்ட பதிப்பை Download செய்து நிறுவிக்கொள்ளலாம். பெரும்பாலும் Driver Software கள் .exe பைலாகவே கிடைக்கின்றன. அவற்றை கிளிக் செய்யும்போதே நிறுவ ஆரம்பித்து விடுகின்றன. நிறுவ ஆரம்பிக்கும்போதே அந்த சாதனத்துக்குரிய பொருத்தமான Driverதானா என்பதை அந்த Software புரிந்துக் கொள்ளும். நிறுவி முடிந்ததும் மெரும்பாலான சந்தர்ப்பங்களில் கணினியை மறுபடி இயக்கினாலே அந்த சாதனம் முறையாக் இயங்க ஆரம்பிக்கும். 


Device Driver என்றால் என்ன?http://tholanweb.blogspot.com/


விண்டோஸில் Driver Software முறையாக நிறுவப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள டிவைஸ் மேனேஜரை (Device Manager) அணுக வேண்டும். அதற்கு மை கம்பிய்யூட்டர் மேல் ரைட் க்ளிக் செய்து ப்ரொப்படீஸ் தேர்வு செய்யுங்கள். தோன்றும் டயலாக் பாக்ஸ்ல் ஹார்ட்வேர் டேபில் கிளிக் செய்து டிவைஸ் மேனேஜர் பட்டனில் க்ளிக் செய்ய கணினியில் இணைக்கப்பட்டிருக்கும் அனைத்து சாதனங்களையும் அறிந்து கொள்ளலாம். ஒரு சில குறிப்பிட்ட சாதனம் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள அந்த சாதனத்தைத் தெரிவு செய்து அதன் மேல் ரைட் க்ளிக் செய்து மறுபடியும் ப்ரொப்படீஸ் தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பாக்ஸ்ல் ட்ரைவர் டேபைக் க்ளிக் செய்வதன் மூலம் Driver Software பெயரையும் அதன் பதிப்பிலக்கத்தையும் காணலாம். அத்தோடு அப்டேட் ட்ரைவரில் க்ளிக் செய்வதன் மூலம் ட்ரைவரை மேம்படுத்திக் கொள்ளலாம். அதற்கு உரிய சிடியோ அல்லது இணைய இணைப்போ அவசியம். 




டிவைஸ் மேனேஜரில் சில சாதனங்களின் மேல் மஞ்சள் நிறத்தில் அடையாளமிடப்பட்டிருந்தால் அந்த சாதனத்துக்குரிய Driver Software முறையாக நிறுவப்படவில்லை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.




மனிதனால் முடியாதது எதுவுமில்லை .

முயற்சித்தால் எதுவும் முடியும்.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள். 

                                      நன்றி.

                             என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.





இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தொடர்புடைய பதிவுகள் :


2 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

  1. பலருக்கும் பயன்படும் பதிவு எனக்கும் பயன்படும் பகிர்ந்த சகோவுக்கு நன்றி

    ReplyDelete
  2. தாங்கள் இந்த தளத்துக்கு வந்ததுக்கும் கருத்து தெரிவித்ததுக்கும் நன்றி சகோதரரே. எனது அடுத்த பதிவான "உங்களிடமுள்ள Install Program இல்லாத மென்பொருளுக்கு நீங்களே Install Program உருவாக்குவது எப்படி?" என்ற பதிப்பை மறக்காம பாருங்க அனைவருக்கும் பயன்படும் வகையில் விரைவில் வெளியிடுவேன்.
    என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

    ReplyDelete

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.