கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் :
கம்ப்யூட்டர் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு சி.வி.எஸ்.,(கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் ) என்னும் நோய் தாக்குகிறது. இதனால் பார்வைகக் குறைபாடு, தலைவலி, விழிகள் வரண்டுவிடுதல் ஆகியவை ஏற்படுகின்றன. இவை பெரும்பாலும் குழந்தைகளுக்குதான் அதிகமாக ஏற்படுகிறது.குழந்தைகள் பெரும்பாலும் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதனால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.
கம்ப்யூட்டரில் அமரும் முறை :
- கண்ணுக்கும் கம்ப்யூட்டர் திரைக்கும் இடையில் 20-26இன்ச் இடைவெளி விட்டு அமரவும்.
- திரையை 4-6 இன்ச் குனிந்து பார்க்கும்படி அமைக்கவேண்டும்.
- திரையை 10-20 டிகிரி வரை நிமிர்த்தி வாக்கவும் .
- திரையில் எளுத்தை சரியான அளவில் வைக்கவும். கண்களை சுருக்கிப் பார்க்கும்படி இருக்க வேண்டாம்.
- திரையின் ஒளி அளவு, "காண்ட்ராஸ்ட்" ஆகியவை சரியான விகிதத்தில் வைக்கவும்.
- இருட்டறையில் திரையை பார்க்க வேண்டாம். இருக்கைக்கு மேல் வெள்ளை நிற சி.எப்.எல்.,பல்புக்களை பயன்படுத்தவும். இதனால் கண்களுக்கு தாக்கம் குறையும்.
மூன்று எண் மந்திரம் :
இந்த விதிமுறையை பின்பர்ருங்கள். அதாவது 20 நிமிடத்துக்கு ஒருமுறை 20 அடி கம்ப்யூட்டர் திரையை விட்டு தள்ளிச் சென்று 20 வினாடிகள் ஓய்வு எடுக்கவேண்டும்.
கதிர்வீச்சிலிருந்து கண்களை காக்கும்முறை :
- கம்ப்யூட்டர் திரையிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு தான் அதிகமாக கண்களை பாதிக்கிறது. கதிவீச்சுஅளவினை குறைக்க சி.ஆர்.டி.,மானிட்டர்களை தவிர்க்கவும்.
- பெரும்பாலும் எல்.சி.டி., எல்.இ.டி., மானிட்டர்களை பயன்படுத்தவும்.
மனிதனால் முடியாதது எதுவுமில்லை .
முயற்சித்தால் எதுவும் முடியும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள்.
நன்றி.
என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
மிகவும் நல்ல பதிவு. இதற்காக ஒரு இலவச மென் பொருள் ஒன்றும் உண்டு.இதை தரவிறக்கம் செய்து பதித்துக் கொண்டால், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை ஒலி எழுப்பி ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தும். நீண்ட ஓய்வுக்கு அதாவது 4 மணி நேரம் வேலை செய்தால் கணினி திரையை மூடி, தலைவா போதும் ஒய்வெடுத்துக் கொள் என்று சொல்லி விடும்.
ReplyDeletehttp://www.workrave.org/download/
வணக்கம் மூர்த்தி நண்பரே...
ReplyDeleteதங்கள் இந்த பதிவை பார்வையிட்டதுக்கும் கருத்திட்டதுக்கும் நன்றி.
தங்களுடைய தகவளுக்கு மிக்கநன்றி நண்பரே.