வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் பார்க்கப்போவது என்னவென்று இந்த
பதிவின் தலைப்பை பார்த்தவுடனே புரிந்திருக்கும். நாம் அனைவரும் நீண்ட நாட்களாக
எதிர்பார்த்த பதிவு இது. YouTube போன்ற தளங்களில் நமது வீடியோவை இணைப்பதற்க்கு வீடியோவின்
அளவு (size) அதிகமாக இருப்பதால் அந்த வீடியோவை இணைப்பதற்கு மிகுந்த சிரமமடைகிறோம். அந்த சிரமம் இனி
தேவையில்லை.
- இப்போது Windows Movie Makerஐ திறந்து அதில் கீழேக்காட்டியவாறு Import video என்ற பொத்தானை அழுத்தவும்.
- பிறகு உங்களுக்கு தேவையான வீடியோவை தேர்தேடுத்து அதில் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்யவும்.
- பிறகு File சென்று அதில் Save Movie File... என்பதை கிளிக் செய்யவும்.
- பிறகு வரும் விண்டோவில் My Computer என்பதை தேர்ந்தெடுக்கவும்.
- பிறகு வரும் விண்டோவில் உங்கள் வீடியோ சேவ் ஆகவேண்டிய பெயரையும் , இடத்தையும் குறிப்பிடவும்.
- பிறகு வரும் Movie Setting விண்டோவில் Other Settings: என்பதை தேர்ந்தெடுத்து
- அதில் Video for broadband (340 kbps) என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இதில் உங்கள் வீடியோவின் அளவுக்கேற்ப Video for broadband (340 kbps) (or) Video for broadband (512 kbps) என தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
- பிறகு Next பொத்தானை அழுத்தி வீடியோவை சுருக்க ஆரம்பிக்கலாம்.
பார்த்தீங்களா நண்பர்களே 10MB அளவுள்ள இந்த வீடியோ 4MB யா மாறிருச்சு
எப்புடி...
முக்கிய குறிப்பு :
இந்த முறையில் உங்கள் வீடியோவின் தரம் நீங்கள் கொடுக்கும் அளவுக்கேற்ப குறையும்.
மனிதனால் முடியாதது எதுவுமில்லை .
முயற்சித்தால் எதுவும் முடியும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை பற்றிய கருத்தை எளுதவும்.
அது எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்குவிக்கும்.இதை அனைவரும் அறிந்துக்கொள்ள தங்களது சமூகதளங்களில் பகிருங்கள்.
நன்றி.
என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.
இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்
ஒரு குழந்தை பெண்ணாக மாறும் போது அவள் வளர்ச்சி வெகு வேகமாக இருக்கும்.உங்கள் தளமும் இப்படி வளருவதை காண மகிழ்சியாக இருக்கிறது. என்னுடன் வேலை பார்க்கும் அமெரிக்க நண்பர்களிடம் அன்றும் இன்றும் என காட்டினேன்.நம்ப முடியலையே என்றார்கள். இன்று ஒரு தமிழ் வலைப்பூ இணையத்தளமாக மாற்றம் அடைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அது போல் உங்கள் வளர்ச்சியும் இருக்க வாழ்த்துகிறேன்.
ReplyDeleteவணக்கம் மூர்த்தி தோழரே...
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கு நன்றி தோழரே.
எனது பதிவுகளை ஆரம்பத்திலிருந்து கருத்திட்டு ஊக்குவித்துவரும் தோழர்களில் நீங்களும் ஒருவர். உங்களைப்போன்ற தோழர்கள் இருக்கும்வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் எனது பதிவுகள் தொடர்ந்து வெளிவரும்.
நன்றி.
என்றும் உங்கள் அன்புடன் : அறிவுவிக்னேஷ்.