தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

Thursday, 19 April 2012

விண்டொஸ் 7 னில் பழைய மென்பொருள்களையும் இயக்குவதற்கு இதோ ஒரு வழி!


ங்களுடைய வாழ்வில் பல்வேறுபட்ட புதுமைகள் நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அதற்கு ஏற்றது போல் நாங்களும் எங்களுடைய தேவைகளை மாற்ற வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது. இந்த வகையில் நாம்  
புதிதாக ஒரு இயங்கு தளம் (OS) அல்லது ஒரு இயங்கு தளத்தின் (OS) புதிய பதிப்பு வெளிவரும் போது சில மென்பொருள்களை அவற்றில் இயக்க முடிவதில்லை. உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீ பதிப்பு வெளி வந்த போது அதில் எக்ஸ்பீயிற்கு முந்தைய பதிப்புகளில் இயங்கிய ப்ரோக்ரம்களை இயக்க முடியாமல் போனது. அதன் பிறகு வெளிவந்த விஸ்டா பதிப்பிலும் அதே நிலைமைதான். இவ்வாறே இப்போது வெளி வந்துள்ள விண்டோஸ் 7னிலும் அதே நிலைமை தொடர்கிறது. பழைய மென்பொருள்களை புதிய இயங்குதலத்தில்  (OS) ல் பயன்படுத்துவது எப்படி என்று பார்போம்.  


ஒரு இயங்கு தளத்தை மேம்படுத்தி அதன் புதிய பதிப்பை வெளியிடும்போது பழைய அப்லிகேசன்களும் இயங்கத் தக்கதாக அதற்கு ஒத்திசையும் வண்ணம் உருவாக்கவே முயற்சிக்கப்படும். இதனை பேக்வர்ட் கம்படிபிலிட்டி (Backward Compatibility) எனப்படும் இருந்தாலும் சில அப்லிகேசன்களை இவ்வாறு இயக்க முடிவதில்லை.

எனினும் இந்த சிக்கலுக்கு தீர்வாக மைக்ட்ரோஸொப்ட் நிறுவனம் தனது புதிய இயங்கு தளங்களில் பழைய ப்ரோக்ரம்களையும் இயக்கக் கூடிய வசதியை எக்ஸ்பீ, விஸ்டா மற்றும் விண்டொஸ் செவன் பதிப்புகளிலும் வழங்கி வருகிறது.

உதாரணமாக விண்டோஸ் எக்ஸ்பீயில் முறையாக இயங்கிய ஒரு ப்ரோக்ரம் விஸ்டாவிற்கு மாறிய பிறகு இயங்க மறுத்தால் அந்த குறிப்பிட்ட ப்ரோக்ரமுக்கு மட்டும் தேவையான செட்டிங்கை மாற்றி இயங்க வைக்கும் வசதி உள்ளது. அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள். 

இயக்க விரும்பும் ப்ரோக்ரமுக்குரிய .exe பைலின் மேல் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்து Properties தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் compatibility டேபில் க்ளிக் செய்யுங்கள். அடுத்து Run this program in compatibility mode for என்பதைத் தெரிவு செய்யுங்கள். பின்னர் விண்டோஸின் உரிய பதிப்பைத் தெரிவு செய்து விட்டு ஓகே சொல்லுங்கள்.
அப்படியும் அது இயங்காது போனால் மேலும் சில தெரிவுகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக அதே டயலொக் பொக்ஸில் Run this program as an administrator என்பதைத் தெரிவு செய்து இயக்கிப் பாருங்கள்.



ப்ரோக்ரம்ஸ் லிஸ்டில் உள்ள Program Compatibility Wizard மூலமாகவும் ஒரு ப்ரோக்ரம் இயங்கு தளத்துடன் ஒத்திசைகிறதா என்பதைப் பரீட்சித்துப் பார்க்கலாம்.

முக்கியக்குறிப்பு :

சரி, இந்த .exe பைலை எங்கே போய்த் தேடுவது? எங்கும் போக வேண்டாம் . 
(my computer விண்டோவில் C ட்ரைவில் programe பைல்ஸ் போல்டரைத் திறந்து பாருங்கள். நீங்கள் இயக்க விரும்பும் ப்ரோக்ரமுக் குரிய போல்டரும் அங்கு காணப்படும். அந்த போல்டரில் .exe பைலைக் காணலாம்.)

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இப்பதிவைப் பற்றிய கருத்தை தெறிவிக்கவும்.மேலும் சமூக தளங்களில் பகிர்ந்து இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தொடர்புடைய பதிவுகள் :


No comments:

Post a Comment

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.