தாங்கள் என் இணைய பக்கத்திற்கு வந்ததுக்கு நன்றி... அன்புடன் : அறிவுவிக்னேஷ்.

Sunday, 1 April 2012

நீங்களே Portable மென்பொருட்களை உருவாக்கலாம் வாங்க!


எந்நேரமும் கணனியில் வேலைசெய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும், வேவ்வேறு இடங்களில் (பிற) கணனிகளில் வேலைசெய்ய வேண்டி ஏற்படும் போது நமக்கு தேவையான மென்பொருட்களை எடுத்து சென்று அக்கணனிகளில் நிறுவி வேலையை ஆரம்பிக்கும் போது காலம் கடந்துவிடும். 
அவாவாறான சந்தர்ப்பங்களில்  கையடக்கமான (Portable) மென்பொருட்கள் இருந்தால் நமது வேலைகளை இலகுவாக்கிக் கொள்ளலாம்.

எங்கும் எடுத்துச் செல்ல  கூடிய Portable மென்பொருட்களை உருவாக்கலாம் வாங்க!


இதற்கு வேறாக மென்பொருட்களும் தேவையில்லை, இதற்கு தேவைப்படுவது WIN RAR மென்பொருள் மட்டுமே.
இங்கு portable photoshope 7.0   application ஒன்றை உருவாக்குவது எப்படியென பார்ப்போம்.
photoshope 7.0 (ஊடக இயக்கி) ஒன்று செயற்பட தேவையான கோப்புகளை தெரிவுசெய்து கொள்ளுங்கள்.

அவற்றை WinRar archive ற்கு add செய்து கொள்ளுங்கள்.

பின் வரும் dialog box ல் உருவில் காட்டப்பட்டுள்ளவாறு அமைப்புகளை மாற்றிக்கொள்ளுங்கள்.

இப்பபொழுது Advanced எனும் பகுதியில் SFX options என்பதை தெரிவு செய்யுங்கள்.

பின் General tab இல் பிரித்தெடுத்த பின்  செயல் படுத்த வேண்டிய கோப்பின் பெயரை எழுதுங்கள்.

பின்னர் Text and Icon எனும் பகுதியில் பின்வருமாறு மாற்றங்களை செய்யுங்கள்.

அதன் பின் SFX option இல் உள்ள Modes tab பை கிளிக் செய்து, 

படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு மாற்றங்களை செய்யுங்கள். அவ்வளவே தான் கையடக்க மென்பொருள் தயாரிக்கப்பட்டுவிட்டது. இதை எந்த கணினியிலும் நிறுவாமல் பயன்படுத்தலாம்.
நீங்களும் உங்களுடைய  PORTABLE மென்பொருளை உருவாக்கி விட்டீர்களா?

இந்த பதிவை பற்றிய கருத்துக்களை தேறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 
உங்கள் கருத்துக்கள் எனது அடுத்த பதிவை வெளியிட ஊக்கப்படுத்தும் .
               
நன்றி.


இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தொடர்புடைய பதிவுகள் :


8 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

  1. மிகவும் பயனுள்ள பதிவு நண்பர் அறிவுவிக்னேஷ்......


    அன்புடன்: கான்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கான் நண்பரே...
      என் இணயப்பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி.

      Delete
  2. அருமையான பதிவு தம்பி .... இது தொடரட்டும் ....

    ReplyDelete
  3. வணக்கம் பொய்யாமொழி நண்பரே...

    உங்களைப்போன்ற நண்பர்கள் எனக்கு இருக்கும்போது
    எனது படைப்பு இன்னும் தொடரும்.

    ReplyDelete
  4. super post thanks
    rompa nala ethirpartha visajam

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் நண்பா .நான் தேடிக்கொண்டிருந்த பதிவு .இது அனைவருக்கும் உதவும் நண்பா .

    vmware ஐ இப்படி மாற்றலாமா நண்பா?

    ReplyDelete
  6. photoshop programe எந்த இடத்தில் copy செய்தீர்கள் என்று கொஞ்சம் விளக்கவும் பிளீஸ் நண்பா .install செய்த பின் எந்த பகுதியில் இறுந்து copy செய்தீர்கள்

    ReplyDelete
  7. வணக்கம் ராஜா தோழரே...
    தாங்கள் இந்த தளத்திற்கு வந்தமைக்கு நன்றி.

    இந்த முறையில் சில மென்பொருள்கள் மட்டுமே செயல்படுகிறது. சிலவை செயல்படவில்லை.அதில் இந்த photoshop programeமும் ஒன்று இது pcயில் instal செய்துருக்கும் போது செயல்பட்டது. photoshopபை uninstal செய்தவுடன் இந்த file செயல்படவில்லை. ஆனால் சிலவை இயங்குகின்றது.குறிப்பாக இலவச மென்பொருள் எந்த பிரச்சினையும் இல்லாமல் செயல்படுகிறது.

    ReplyDelete

இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் அதைப்பற்றி மின்னோட்டம் இங்கு கொடுக்கவும்.